;
Athirady Tamil News

பயணிகள் பேருந்தில் துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி..!!

0

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் பயணிகள் பேருந்து ஒன்றின் உள்ளே இடம்பெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தங்காலை நீதிமன்றத்தில் இடம்பெற்ற கொலை வழக்கு ஒன்றிற்காக சென்ற நபரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயது நிரம்பியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 13 =

*