;
Athirady Tamil News

மனைவிக்கு சாரதியாக கட்டணம் வசூலித்த கணவன்: மனைவி எடுத்த முடிவு..!!

0

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் நபர் ஒருவர் ஒவ்வொரு முறை தமது மனைவியை காரில் அழைத்துச் செல்ல கட்டணம் வசூலித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு முறை தம்மை வெளியே அழைத்துச் செல்ல 100 பவுண்ட்ஸ் கட்டணமாக வசூலித்த கணவனிடம் இருந்து குறித்த பெண்மணி விவாகரத்து கோரியுள்ளார்.

தொடர்புடைய கணவனுக்கு வேலை எதுவும் இல்லை என கூறப்படுகிறது. மனைவிக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை என்பதால், பணி புரியும் இடத்தில் அவரை கொண்டு சென்று சேர்ப்பதற்கும், பணி முடித்து அழைத்து வருவதும் கணவனின் பணியாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் திடீரென்று அவர், ஒவ்வொரு முறைக்கும் கட்டணமாக 100 பவுண்ட்ஸ் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

முதன் முறை தமது கணவர் தானே என அனுமதித்த அவருக்கு, அது தினமும் கட்டாயமாக்கியதால் அதிர்ந்துள்ளார்.

தமது மனைவிக்காக வாகனம் ஓட்டுவதால் தமது உற்ற நண்பர்களிடம் இருந்து அது தம்மை பிரிக்கிறது என அப்பாவி கணவன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தமது கணவரை வாகனம் ஓட்ட அழைப்பதை நிறுத்திய குறித்த பெண்மணி, உடனடியாக விவாகரத்துக்கு கோரியுள்ளதாக கூறப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*