;
Athirady Tamil News

சாலை விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய ஸ்மார்ட் கைக்கடிகாரம்..!!

0

ஜேர்மனியில் சாலை விபத்தில் சிக்கிய பெண் ஒருவர், அவர் அணிந்திருந்த ஆப்பிள் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தின் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஜேர்மனியில் கேசி ஆண்டர்சன் எனும் பெண், தனது 9 மாத குழந்தையுடன் காரில் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார்.

அச்சமயம், கேசி தனது கையில் அணிந்திருந்த ஆப்பிள் கைக்கடிகாரத்தில், அவசர உதவி எண்ணான 911யை அழுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் ஆம்புலன்ஸுடன் வந்தனர்.

அதன் பின்னர், கேசி ஆண்டர்சனும், அவருடைய குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து ஏற்பட்டபோது ஸ்மார்ட் கைக்கடிகாரத்தில் கேசி ஆண்டர்சன் கூறுகையில், ‘விபத்துக்குள்ளானதும், எனது காரில் இருந்த அனைத்து பொருட்களும் மேலே பறந்தன.

நான் காரின் steering-யில் மோதியதால், எனது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டுகிறது. நான் எதை பார்த்தாலும் கறுப்பாகவே தெரிகின்றன.

எனது கைகளின் உதவியுடன் எனது கைப்பேசியை எடுத்தேன். ஆனால், பார்வை சரியாக தெரியாததால் அதனை உபயோகிக்க முடியவில்லை. அதன் பின்னர் தான், எனது ஆப்பிள் கைக்கடிகாரத்தின் உதவியுடன், 911 என்ற எண்ணை தொடர்பு கொண்டேன்’ என தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − eighteen =

*