;
Athirady Tamil News

ஊழலற்ற நாடுகளின் பட்டியல்: சுவிட்சர்லாந்துக்கு எத்தனையாவது இடம்?..!!

0

Transparency International என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வொன்றில் 2017ஆம் ஆண்டின் ஊழல் குறைவான நாடுகளில் சுவிட்சர்லாந்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

நியூஸிலாந்து மற்றும் டென்மார்க்குக்கு அடுத்து சுவிட்சர்லாந்துதான் ஊழல் குறைவான நாடு என்ற புகழைப் பெற்றுள்ளது.இதற்குமுன் ஐந்தாவது இடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து சிறு புள்ளிகள் வித்தியாசத்தில் ஐந்தாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்குத் தாவியுள்ளது.

வர்த்தகர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு பொதுத்துறையில் காணப்படும் ஊழல் குறித்த ஆய்வு ஆகும்.Transparency International அமைப்பின் சுவிட்சர்லாந்து இயக்குநர் Martin Hilti கூறும்போது, இந்த தரவரிசைப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதால் சுவிட்சர்லாந்தில் ஊழலே இல்லை என்று கூற முடியாது.

உண்மையில் சொல்லப்போனால் சுவிட்சர்லாந்தின் தனியார் துறைகளில் ஊழல் சர்வ சாதாரணமான ஒன்றாகக் கணப்படுகிறது. இந்த ஆய்வில் தனியார் துறைகள் சேர்க்கப்படவில்லை என்று கூறினார்.

சுவிஸ் நிறுவனங்கள் வெளி நாடுகளில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம், அதுவும் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ஊழல் உலகளாவிய ஒரு பிரச்சினையாக உள்ளது. பெரும்பாலான நாடுகள் அதை எதிர்கொள்ளும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுவதில்லை என்றும் Martin Hilti கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 2 =

*