;
Athirady Tamil News

கரன்சி நோட்டுகளை திரும்ப பெற கால நிர்ணயம் செய்யக்கூடாது: சுவிஸ் அரசு..!!

0

செல்லாது என அறிவிக்கப்பட்ட கரன்சி நோட்டுகளை திரும்பப்பெற கால வரம்பு நிர்ணயம் செய்யக்கூடாது என சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

செல்லாது என அறிவிக்கப்பட்ட கரன்சி நோட்டுகள் வங்கிகளில் திரும்ப செலுத்தப்படாத பட்சத்தில் தொலைந்ததாகவோ சேதமடைந்ததாகவோ கருதப்படும்.

இந்த நிலைப்பாட்டை மாற்றி அந்த நோட்டுகளை திரும்பப்பெற கால வரம்பு நிர்ணயம் செய்யக்கூடாது என Federal Council நாடாளுமன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.அந்த விதி நாகரீக காலத்திற்கு பொருந்தாது என்று அரசு தெரிவித்துள்ளது, இந்த கால நிர்ணய வரம்பை ஒழித்தல் திடீரென்று மதிப்பிழந்த பணத்தை வைத்திருப்பது போன்ற எண்ணத்திலிருந்து மக்களை விடுவிக்கும்.

இந்த மாற்றம் குற்றம் நிகழும் அபாயத்தைக் அதிகரிக்காது என்றும் Federal Council கூறுகிறது.செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகள் அவ்வாறு அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப்பின் கட்டணங்களாக பயன்படுத்தப்பட முடியாது என்னும் விதியில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த கால கட்டத்திற்குப் பிறகு அந்த நோட்டுகளை சுவிஸ் தேசிய வங்கி கவுண்டர் ஒன்றில் அவற்றின் நம்பகத்தன்மையும் அந்தப்பணம் எவ்வழியில் கிடைத்தது என்பதையும் நிரூபித்தபின் மாற்றிக் கொள்ளலாம் என்று Federal Council வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.

பிரித்தானிய பவுண்ட், அமெரிக்க டொலர் மற்றும் யூரோ போன்ற பிற முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச கரன்சிகளை கால வரையறையின்றி எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*