;
Athirady Tamil News

சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்’ எனும் தொனிப்பொருளில் விசேட கலந்துரையாடல்..!! (படங்கள்)

0

‘சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்’ எனும் தொனிப்பொருளில், விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் மன்னார் கறிற்ராஸ் வாழ்வுதயத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தேசிய சமாதான பேரவையின் மாவட்ட நிகழ்ச்சித்திட்ட அலுவலகர் ஏ.மெடோசன் பெரேரா தலைமையில் இடம் பெற்றகுறித்த கலந்துரையாடலின் போது, இலங்கையில் இடம் பெற்ற யுத்தத்தின் பின்னர் ஏற்பட வேண்டிய நல்லிணக்கம் தொடர்பிலும், சமையங்களுக்கிடையிலும், மக்களுக்கிடையிலும் ஒற்றுமையினை ஏற்படுத்துதல் மற்றும் முரண்பாடுகளின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில், சர்வமதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,பெண்கள் அமைப்புக்களின் பிரதி நிதிகள், இளைஞர் அமைப்பு ஆகியவற்றின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*