;
Athirady Tamil News

சர்வதேச குற்றவியல் பொறிமுறையை அமுல்படுத்த கோரி யாழில் கையைழுத்து வேட்டை..!! (படங்கள்)

0

ஜ.நா பாதுகாப்பு சபை தலையிட்டு, இலங்கையை சர்வதேச குற்றவியல் பொறிமுறையை அமுல்படுத்தகோரி யாழ்ப்பாணத்தில் கையைழுத்து வேட்டையொன்று நடத்தப்பட்டுள்ளது.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் குறித்த கையெழுத்து வேட்டை இடம்பெற்றுள்ளது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில பொது அமைப்புக்கள் இணைந்து நடத்திய கையெழுத்து வேட்டையில், பெருமளவான மக்கள் கலந்து கொண்டு கையொப்பமிட்டனர்.

இதன்போது ‘இலங்கை போர்குற்ற விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு நியாயதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஜ.நா பாதுகாப்பு சபை நிறைவேற்றவேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 8 =

*