;
Athirady Tamil News

நோட்டன்பிரிட்ஜ் பகுதியில் விபத்து: மூவர் படுகாயம்..!! (படங்கள்)

0

நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதி-அட்லிஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுங்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) மாலை 5.00 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் பகுதியிலிந்து நோட்டன்பிரிட்ஜ் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் கினிகத்தேனை பகுதியிலிருந்து நோட்டன்பிரிட்ஜ் பகுதியை நோக்கி சென்ற டிப்பர் லொறி ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவருமே காயங்களுக்குள்ளாகிய நிலையில், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை நோட்டன்பிரிட்ஜ் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*