;
Athirady Tamil News

மாதர் கிராம அபிவிருத்திச்சங்க தையல் கண்காட்சி..!! (படங்கள்)

0

மாதர் கிராம அபிவிருத்திச்சங்க தையல் கண்காட்சி – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பங்கேற்பு

வலி.தெற்கு (உடுவில்) பிரதேசசெயலகத்துக்குட்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச்சங்களினால் நடாத்தப்பட்ட தையல் பயிற்சி நிறைவும், மாணவிகளின் கலைப்பொருட்களின் கண்காட்சியும் இன்று 26.02.2018 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இணுவிலில் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், யாழ்.மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பஞ்சலிங்கம் மற்றும் வலி.தெற்கு (உடுவில்) பிரதேசசெயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் உமாபாலன் மற்றும் பிரதேச கிராம அலுவலர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தையற்பயிற்சி பெற்ற மாணவிகளின் கலைப்பொருட்களும், தைத்த ஆடைகளும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், பயிற்சியை நிறைவு செய்த மாணவிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி தையற்பயிற்சி நிலையத்துக்கான பயிற்சிக்குத்தேவையான துணி வகைகளை வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தனது 2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டின் கீழ் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 10 =

*