;
Athirady Tamil News

வியானா நீரோடையில் கார் விபத்து..!! (படங்கள்)

0

பதுளை – மஹியாங்கனை பிரதான வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த காரொன்று இன்று (திங்கட்கிழமை) காலை 7.20 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த கார் மாபாகட வெவ என்ற இடத்தில் வியானா நீரோடையில் விழுந்த போது அதில் பயணம் செய்த நால்வரில் மூவர் காப்பாற்றப்பட்டனர். எனினும் ஒருவரை காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாகனத்தில் பண்டாரவளையிலிருந்து மஹியாங்கனை நோக்கி பயணம் செய்த ஆசிரியர்கள் மூவர் மற்றும் வங்கி அதிகாரியொருவர் ஆகியோரே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேசவாசிகளும் மஹியாங்கனை பொலிஸ் அதிகாரிகளும் சேர்ந்து ,காணமல் போன நபரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் மஹியாங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியாங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 5 =

*