பப்புவா நியூ கினியா தீவில் 6.4 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்..!!

பப்புவா நியூ கினியா தீவில் இன்று மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பப்புவா நியூ கினியா தீவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மவுண்ட் ஹேகன் நகரில் சுமார் 142 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் சுமார் 6.4 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு நிலைமை சீரானது.
பப்புவா நியூ கினியா தீவில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 24 மணி நேரத்துக்குள் மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.