;
Athirady Tamil News

காட்டுத்தீயினால் முற்றாகக் கருகிய 50 ஏக்கர் பிரதேசம்…!!

0

மாத்தறை மாவட்டத்தின் தெனியாய என்சல்வத்த மத்துகொபய் பிரதேசத்தில் நேற்று(26.02.2018) பகல் 11.00 மணியளவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

என்சல்வத்த தோட்டத்திற்கு சொந்தமான சுமார் 100 ஏக்கருக்கு அதிகமான பாதுகாக்கப்பட்ட வனாந்தரத்திலேயே, இந்த தீ ஏற்பட்டுள்ளது.

இதுவரைக்கும் சுமார் 50 ஏக்கர் முற்றாக தீயினால் கருகியுள்ளது. இதில் கருப்பன் தேயிலை,மவ்கனி,வாகை போன்ற மரங்களும், மூடு பயிர்களும் தீயினால் சாம்பலாகியுள்ளது.
தீயை கட்டுபடுத்த தெனியாய பொலிஸாரும்,விசேடஅதிரடிபடையினரும் வருகைத்தந்த போதிலும், தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three − three =

*