;
Athirady Tamil News

மீள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை…!!

0

ஸ்ரீலங்கன் விமான சேவையினை மீள மறுசீரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இதற்கான தீர்மானத்திற்கான பரிந்துரைகளை, பிரித்தானிய நிறுவனம் ஒன்று சமர்ப்பித்துள்ளதாக, திறைசேரியின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரத்துங்க தெரிவித்துள்ளார்.

மறுசீரமைக்கும் பணிக்கான குழுவானது, மேற்படி பரிந்துரை அறிக்கையினை ஆராய்ந்து ஏற்கக்கூடிய அம்சங்கள் இருப்பின், அதனை பரிசீலணை செய்யும். சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகள் அனைத்தையும் ஆராய்ந்ததன் பின்னர், தமது குழு அதன் பரிந்துரைகளை அமைச்சரவை குழுவிற்கு சமர்ப்பிக்கும் என, திறைசேரியின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*