;
Athirady Tamil News

மது அருந்திய போது செய்த தவறால் பரிதாபமாக உயிரிழந்த காவற்துறை அதிகாரி…!!

0

அம்பலாந்தொட்ட காவற்துறையில் பணியாற்றிய காவற்துறை அதிகாரியொருவர் தவறுதலாக விஷம் அருந்தியதில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த காவற்துறை அதிகாரி 53 வயதுடைய மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

நேற்றைய தினம் குறித்த காவற்துறை அதிகாரி சூரியவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது , அவர் அதிகமாக மதுபானம் அருந்தியுள்ள நிலையில் , குறித்த சந்தர்ப்பத்தில் போத்தல் ஒன்றில் இருந்த விஷத்தை தவறுதலாக அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விஷம் அருந்திய பின்னர் கவலைக்கிடமான நிலையில் சூரியவெவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவற்துறை அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + one =

*