;
Athirady Tamil News

எரிபொருள் தட்டுப்பாடா? தெளிவுபடுத்துகிறது பெற்றோலியக் கூட்டுத்தாபனம்…!!

0

நாடு முழுவதிலும் டீசல் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவிவருவதாக தெரிவிக்கப்பட்டுவரும் தவறான தகவல்களை நம்பவேண்டாம் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒருசில செய்தி இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் இவ்வாறான தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், அதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.

பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளையும், ஐக்கியத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் வெளியிடப்படுகின்ற இப்படியான தகவல்களை நம்பவேண்டாம் என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல ஆகிய களஞ்சிய நிலையங்களில் நாட்டுக்குத் தேவையான எரிபொருள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வருடத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியதால் நாடளாவிய ரீதியில் சுமார் மூன்று தினங்களுக்கும் மேல் வழமையான செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*