;
Athirady Tamil News

வடக்கு மாகாண சபையில் புதிய உறுப்பினர்கள் இருவர் தெரிவு…!!

0

வடமாகாணசபையின் 117வது அமர்வு இன்று(27-02-2018) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது வடமாகாண சபையின் உறுப்பினர்களாக புதியவர்கள் இருவர் பதவியேற்றுக்கொண்டனர்.

உள்ளுாராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் முகமாக தனது மாகாணசபை உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்திருந்த இம்மானுவேல் ஆர்னோல்ட்டுக்கு பதிலாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் சபாரட்ணம் குகதாஸ் என்பவர் இன்று(27-02-2018) உறுப்பினராக பதிவயேற்றார்.

அத்துடன் கடந்த மாதம் தனது பதவியை இராஜனாமா செய்திருந்த முஸ்லிம் காங்கிரசின் மன்னார் மாவட்ட உறுப்பினர் மொஹம்மம் றைசிற்கு பதிலாக அக்கட்சி சார்பில் அப்புல் நியாஸ் சினி மொஹம்மட் என்பவரும் புதிய வடமாகாண சபை உறுப்பினராக அவைத் தலைவரினால் அறிவிக்கப்பட்டதுடன் சபை அமர்வுகளில் இவ்விருவரும் பங்குபற்றினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − eight =

*