;
Athirady Tamil News

அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும் ஐ.நாவின் கொடி…!!

0

ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியின் இறுதிநிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உனா மைக்கோலி உடல்நலக் குறைவினால் திடீரென மரணமானார். மருத்துவ விடுப்பில் இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.

அன்னாரின் மறைவையடுத்து நாட்டின் தலைவர்கள் அனுதாபங்களைப் பகிர்ந்துவரும் நிலையில் கொழும்பில் உள்ள ஐ.நா பணியகத்தில் ஐக்கிய நாடுகள் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

நேற்று நடந்த அஞ்சலி நிகழ்வில், இலங்கையில் செயற்படும் ஐக்கிய நாடுகள் சபை கிளை அமைப்புகளின் அதிகாரிகள், பணியாளர்கள் கலந்துகொண்டு உனா மக்கோலியின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன வணக்கம் செலுத்தினர்.

இந்த நிலையிலேயே உனா மக்கோலியில் இறுதி நிகழ்வு எதிர்வரும் வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1.30 மணி தொடக்கம் 3.30 மணி வரை ஜெயரத்ன மலர்ச்சாலையில் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்பட்டு, மாலை 4 மணியளவில் பொறளை இடுகாட்டில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 5 =

*