;
Athirady Tamil News

கழுத்தை அறுப்பதாக கூறிய பிரிகேடியருக்கு, பாதுகாப்பு அளிக்கும் இராணுவம்…!! (படங்கள் & வீடியோ)

0


லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது.

லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக கடந்த 4ஆம் திகதி ஈழத் தமிழர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது தமிழரின் கழுத்தை அறுப்பதாக சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான எதிர்ப்பலைகள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து அவர் விசாரணைக்காக இலங்கை அரசாங்கத்தினால் கடந்த வாரம் நாட்டிற்கு அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, இலங்கை இராணுவத் தளபதி லெப்தினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவை நேற்று திங்கட்கிழமை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போதே இராணுவத் தளபதி இந்த உறுதியை அவருக்கு அளித்திருக்கின்றார்.

மேலும் பிரிகேடியர் பிரியங்கவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சகலவித இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாகவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இதேவேளை விசாரணை என்ற பெயரில் நாட்டிற்கு மீளழைக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ புலமைப் பரிசிலுக்காக சீனாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழர்களை மிரட்டும் இலங்கை அதிகாரி

புலம்பெயர் தமிழர்களை சைகையால் மிரட்டும் இலங்கை தூதரக அதிகாரி..!இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்..!www.ns7.tv | #LondonTamils | #SrilankaIndependenceDay | #SrilankanOfficerThreatenTamils | News7 Tamil

Gepostet von News7Tamil am Montag, 5. Februar 2018

https://www.facebook.com/news.eelam/videos/857958117662156/

தொடர்புபட்ட செய்திக்கு…

லண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என, மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரி..! (வீடியோ) -இது எப்படி இருக்கு-

லண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என, மிரட்டி, பணி நீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியர் மீண்டும் பணியில்..!! (படங்கள் &வீடியோ) இது எப்பிடி இருக்கு.

“நான் ஏன், அப்படி செய்தேன்?”.. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விளக்கம்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − one =

*