;
Athirady Tamil News

கேரளாவில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: 3 வாலிபர்கள் கைது..!!

0

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலப்பரம்பு பகுதியை சேர்ந்தவர் அகில் (வயது 21). இவர்களது நண்பர்கள் பாரத்தோட்டை சேர்ந்த விஷ்ணு வினோத் (18), அஸ்வின் மோகன் (21).

அகில் வீட்டருகே 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். அந்த மாணவியை அகில் காதல் மொழிபேசி மயக்கினார். பின்னர் மாணவியுடன் உல்லாசம் அனுபவித்தார். இதுதவிர அவரிடம் நகை, பணத்தை வாங்கிக் கொண்டார். இது குறித்து அகில் தனது நண்பர்களிடம் கூறி மகிழ்ந்தார். இதனையடுத்து தாங்களும் மாணவியை அனுபவிக்க வேண்டும் என்று அவர்கள் திட்டம் போட்டனர்.

அதன்படி அகிலும், மாணவியும் உல்லாசமாக இருந்தபோது அவர்கள் மறைவாக இருந்து செல்போனில் படம் பிடித்தனர். பின்னர் நண்பர்கள் இருவரும் சேர்ந்து அகில் மற்றும் மாணவியிடம் ஆபாசப்படங்களை காண்பித்து தங்களுடனும் உல்லாசம் இருக்க வேண்டும் என்று மிரட்டினர்.

மிரட்டலுக்கு பயந்த மாணவி அவர்களின் ஆசைக்கும் இணங்கினார். நாளுக்கு நாள் 3 பேரின் தொல்லை அதிகமானாதால் பொறுமை இழந்த மாணவி இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறி அழுதார்.

அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் இது குறித்து குழந்தைகள் காப்பக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர் மாணவியிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் 3 வாலிபர்களும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை என்று தெரிய வந்தது. இதனையடுத்து பேராவூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாணவியை பாலியல் கொடுமை படுத்திய அகில், விஷ்ணு வினோத், அஸ்வின் மோகன் ஆகியோரை கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*