;
Athirady Tamil News

திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்ற திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் கைது..!!

0

திருப்பதி சந்தரகிரி மண்டலம் சேஷாசலம் வனப்பகுதி அருகே உள்ள கே.எம்.எம். கல்லூரி என்ற இடத்தில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வாசு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு கும்பல் உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு வனப்பகுதிக்கு செல்வதை கண்ட போலீசார் அவர்களை சரணடையுமாறு எச்சரிக்கை செய்தனர்.

ஆனால் அந்த கும்பல் வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். அதில் ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னுடன் வந்தவர்கள் கல்யாண் அணை பகுதியில் பதுங்கியிருப்பதாக கூறினார்.

இதையடுத்து கல்யாண் அணை பகுதிக்கு சென்ற செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அங்கு பதுங்கியிருந்த மற்றொருவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள படிமலை கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் அப்பாசாமி (வயது 30). அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் காசி (30) என்பதும், அவர்கள் செம்மரம் வெட்ட வந்தது தெரியவந்தது.

அவர்கள் கொண்டுவந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 14 =

*