;
Athirady Tamil News

அண்ணாநகர் டவர் விரைவில் திறப்பு- 135 அடி உயரத்தில் இருந்து சென்னையை ரசிக்கலாம்..!!

0

சென்னை அண்ணா நகரில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘டவர்’ பூங்கா மிகவும் பழமையான, பிரபலமான பூங்காக்களில் ஒன்று. இங்கு 135 அடி உயர டவர் (கோபுரம்) உள்ளது. பொதுமக்கள் இந்த ‘டவர்’ மேலே ஏறிச்சென்று சென்னை நகரின் அழகை ரசித்து வந்தனர்.

காதல் தோல்வி அடைந்த ஒருசில காதலர்கள் இந்த டவரில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவம் நிகழ்ந்ததால் கடந்த 2011-ம் ஆண்டு ‘டவர்’ மூடப்பட்டது. 7 ஆண்டுகளாக அங்கு பொதுமக்கள், பார்வையாளர்கள், காதலர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பூங்காவுக்கு தினசரி வருகை தரும் பார்வையாளர்கள் சங்கத்தினர் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் டவரை சீரமைத்து திறக்க மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் மாநகராட்சி சார்பில் ரூ.30 லட்சம் செலவில் டவர் (கோபுரம்) நவீன பாதுகாப்பு வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த கோபுரம் திறக்கப்பட உள்ளது. பொதுமக்கள் டவர் மீது ஏறி சென்று சென்னை நகரின் அழகை ரசிக்கலாம். அண்ணாநகர் ‘டவர்’ விரைவில் திறக்கப்படுவது குறித்து பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து தினசரி பூங்காவுக்கு வருகை தரும் பாஸ்கர் கூறியதாவது:-

அண்ணாநகர் டவர் பூங்கா சென்னையில் மிகவும் பிரபலமான பூங்கா ஆகும். தினசரி பொதுமக்கள், பார்வையாளர்கள், வாக்கிங் செல்வோர், காதலர்கள் என ஆயிரக்கணக்கானோர் பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள்.

ஒருசில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்ததால் கடந்த 2011-ம் ஆண்டு டவர் மூடப்பட்டது. தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மறுசீரமைக்கப்பட்டு பாதுகாப்பு வசதிகளுடன் டவர் மீண்டும் திறக்கப்படுகிறது. பொதுமக்களின் வசதிக்காக சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும். அசம்பாவித சம்பவங்களை தடுக்க பூங்காவில் பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும். பூங்காவிற்கு வரும் காதலர்களை கண்காணிக்க வேண்டும். அத்துமீறி நடப்பவர்களை அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − seven =

*