;
Athirady Tamil News

கடுங்குளிர் காற்று: பிரித்தானிய மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..!!

0

ஏற்கனவே கடந்த வாரம் எச்சரித்ததுபோல் “Beast from the East” என்னும் கடுங்குளிர் காற்றுகள் சைபீரியாவிலிருந்து வீசவிருப்பதால் ரயில் போக்குவரத்தில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் மக்கள் இன்று மாலை ஆறு மணிக்கெல்லாம் வீடு திரும்பும்படி வானிலை ஆராய்ச்சிமையம் கேட்டுக்கொண்டுள்ளது.

பிரித்தானியாவின் சில பகுதிகளில் மிகக் குளிர்ந்த வெப்பநிலை காரணமாக சாலைகள் பாதிக்கப்படலாம் என்றும் மின்தடை ஏற்படலாம் என்பதால் கிராமப்பகுதிகள் துண்டுக்கப்படும் சூழல் உருவாகலாம் என்றும் வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

ரயில் சேவைகள் குறைக்கப்படும் என்றும் இன்றிரவு கடைசி ரயில் 10 மணிக்கு புறப்படுமென்றும் செவ்வாய் முதல் வியாழன் வரை பகல் நேர ரயில் சேவை குறைவாகவே இருக்கும் என்றும் Greater Anglia ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.

South Eastern ரயில்வே நிறுவனம் கடைசி நேர குழப்பங்களைத் தவிர்க்க மக்கள் இன்று 6 மணிக்கெல்லாம் வீடு திரும்பும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

லண்டன் ரயில் சேவை, புறப்படுவதற்குமுன் ரயில் சேவைகள் குறித்து விசாரித்துப் பின் பயணப்படும்படி தனது பயனாளிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

பனிப்பொழிவு முன்னறிவிப்பு காரணமாக British Airways, Heathrow விமான நிலையத்திலிருந்து புறப்படும் 36 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

10 சென்டிமீற்றர் பனிப்பொழிவு இருக்கலாம் என்றும் கடும் குளிர் காற்றின் காரணமாக வெப்பநிலை -10 முதல் -15 டிகிரி வரை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தெற்கு மற்றும் கிழக்கு பிரித்தானியா, the Midlands, Scotland மற்றும் Wales ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் மற்றும் amber பனி எச்சரிக்கைகள் விடுக்கபட்டுள்ளன.

கிழக்கு பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவற்றின் சில பகுதிகளில் 20 சென்டிமீற்றருக்கும் அதிகமான பனிப்பொழிவு இருக்கலாம் என்றும் வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 2 =

*