;
Athirady Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெருக்கடியை சந்தித்துள்ள பயணிகள்…!!

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான பயணிகள் நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் லிப்ட் வசதிகள் சரியான முறையில் செயற்படாமையினால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பகுதிக்கு அருகில் மேல் மாடிக்கு செல்லும் லிப்ட் கடந்த சில நாட்களாக இயங்கவில்லை.

விமானங்களுக்கு செல்லும் பல நுழைவுகள் மேல் மாடியிலேயே அமைந்துள்ளது. லிப்ட் இயங்காமையினால் அந்த பகுதிகளுக்கு படிக்கட்டுகளிலேயே பயணிகள் செல்ல நேரிட்டுள்ளது. எனினும் இயலாமை மற்றும் விசேட தேவையுடையோர் விமானங்களுக்கு செல்லும் போது பாரிய சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதனால் அவர்களை தூக்கிக் கொண்டு படிக்கட்டுகளில் செல்ல வேண்டிய நிலை ஏனையவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் இவ்வாறு லிப்ட் இயங்காமல் உள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + ten =

*