;
Athirady Tamil News

ஸ்ரீதேவியின் கணவருக்கு எதிராக திரும்பிய அந்த 15 நிமிடம்: துபாய் போலீஸ் தீவிர விசாரணை.. போனி கபூரிடம் போலீஸ் விசாரணை…!! (படங்கள் &வீடியோ)

0

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவரின் கணவர் போனி கபூரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கியுள்ளது துபாய் போலீஸ்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு மரணம் அடைந்தார். முதலில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.

பின்னர் தான் அவர் மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.

சந்தேகம்

ஸ்ரீதேவியின் மரணத்தில் துபாய் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரின் செல்போனை பறிமுதல் செய்து அவர் யார், யாருடன் பேசினார் என்பதை பார்த்துள்ளனர்.

மும்பை

திருமணம் முடிந்த கையோடு மும்பை வந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் சனிக்கிழமை துபாய்க்கு சென்றுள்ளார். மாலை 5.30 மணிக்கு ஹோட்டலை அடைந்த அவர் 15 நிமிடங்கள் ஸ்ரீதேவியுடன் பேசியுள்ளார்.

மரணம்

மாலை 5.45 மணிக்கு டின்னருக்கு வெளியே செல்ல தயாராக பாத்ரூமுக்கு சென்ற ஸ்ரீதேவி இறந்துவிட்டார். இந்நிலையில் போனி கபூர் மீண்டும் துபாய் சென்றது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

விசாரணை

மும்பைக்கு சென்ற நீங்கள் எதற்காக திரும்பி வந்தீர்கள் என்று துபாய் போலீசார் போனி கபூரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அவரிடம் வாக்குமூலமும் வாங்கியுள்ளனர்.

நண்பர்

மாலை 5.45 மணிக்கு பாத்ரூமுக்கு சென்ற ஸ்ரீதேவி 15 நிமிடங்களாகியும் வெளியே வராததால் போனி கபூர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.

ஸ்ரீதேவி மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்ததை பார்த்துவிட்டு தனது நண்பருக்கு போன் செய்துள்ளார். பின்னர் இரவு 9 மணிக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

துபாய்- மும்பை- துபாய் பயணம் ஏன்?… போனி கபூரிடம் போலீஸ் விசாரணை

திருமண நிகழ்ச்சிக்காக துபாய் வந்துவிட்டு மும்பைக்கும் அங்கிருந்து மீண்டும் துபாய்க்கும் வந்தது ஏன் என்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கா க துபாய்க்கு தனது கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி வந்திருந்தார்.

திருமணம் முடிந்ததும் போனி கபூர் மட்டும் மும்பை சென்றுவிட்டு உடனடியாக மீண்டும் துபாய் வந்து ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இருவரும் இரவு விருந்துக்கு செல்வதற்காக தயாராகியிருந்தபோது அவர்கள் தங்கியிரு்நத நட்சத்திர ஹோட்டல் பாத்ரூமில் மயங்கி இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக முதலில் கூறப்பட்டது.

மதுபானம்

இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு உடற்கூறாய்வு சோதனை நடத்தி முடிக்கப்பட்டன. அதில் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்றும் அவரது ரத்தத்தில் மதுபானம் கலந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

போனி கபூரிடம்

விசாரணை இந்த அறிக்கையில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளதால் அவரது உடல் இந்தியாவுக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரை புர் துபாய் காவல் நிலைய போலீஸார் விசாரணைக்கு அழைத்தனர்.

வாக்குமூலம்

அப்போது அவரிடம் துபாயிலிருந்து மும்பைக்கும் அங்கிருந்து பின்னர் துபாய்க்கும் அடுத்தடுத்து பயணம் மேற்கொண்டது ஏன் என்று போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது.

ஆவணங்கள் வழக்கறிஞரிடம் ஒப்படைப்பு

மேலும் துபாய் போலீஸிடம் இருந்து ஸ்ரீதேவியின் உடற்கூறாய்வு முடிவுகள், போனி கபூரின் வாக்குமூலம் உள்ளிட்ட ஆவணங்கள் அரசு வழக்கறிஞரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அவர் அவற்றை ஆய்வு செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்வார்.

உடலை கொண்டு வருவதில் சிக்கல்

ஆனால் இந்த விவகாரத்தில் உடற்கூறாய்வு அறிக்கையிலும், போனி கபூரின் வாக்குமூலத்திலும் துபாய் அரசு வழக்கறிஞருக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அவரது உடல் இந்தியா வருவதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*