;
Athirady Tamil News

மரண வீட்டிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய ஒன்பது பிள்ளைகளின் தந்தை மரணம்..!!

0

மட்டக்களப்பு வாகரை கதிரவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒன்பது பிள்ளைகளின் தந்தையான ஓய்வுபெற்ற கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.

கதிரவெளி புச்சாக்கேணி எல்லைக்குச் சமீபமாக பால்பண்ணைக்கு அருகில் இடம்பெற்ற இவ்விபத்தில் கதிரவெளியை வசிப்பிடமாகக் கொண்ட ஓய்வுபெற்ற கிராம சேவகரான குழந்தைவேல் சிங்காரவேல் (வயது-68) எனும் ஒன்பது பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கதிரவெளியில் தனது உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்து ஆறுதல் கூறிவிட்டு நேற்று திங்கட்கிழமை இரவு 7.50 மணியளவில் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சம்பவத்தில் உயிரிழந்த ஓய்வுபெற்ற கிராம சேவகர் பயணித்துள்ளார்.

அந்நேரம் கதிரவெளியிலிருந்து வாகரைப் பக்கமாக கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்து கொண்டிருந்த கன்டெர் ரக வாகனம் ஓய்வுபெற்ற கிராம சேவகர் மீது மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ஓய்வுபெற்ற கிராம சேவகரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்தையேற்படுத்திய வாகன சாரதியைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*