;
Athirady Tamil News

பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்துதில் திடீர் தீப்பரவல்…!!

0

கண்டிக்கு சென்ற அரச பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும். குறித்த பேருந்திலிருந்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

மாத்தளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் கண்டி தெற்கு டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்று வீதியில் திடீரென தீப்பற்றியதால் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

மாத்தளையில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு கண்டியை நோக்கிப் பயணித்த மேற்படி அரச பேருந்து அலவத்துகொடை பலகடுவ பிரதேசத்தில் வைத்து அதிகாலை 5 மணியளவில் தீப்பற்றியதாக அதன் சாரதி மற்றும் நடத்துனர் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

அரச பேருந்து தீப்பற்றும் போது அதிலிருந்த பயணிகள் பாதுகாப்பான முறையில் பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக அலவத்துகொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 1 =

*