;
Athirady Tamil News

இரண்டு நாட்களுக்கு முன் காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்பு..!!

0

சிலாபம், இரணவிலை பிரதேசத்தில் 2 நாட்களுக்கு முன் காணாமல்போன சிறுவனின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரணவிலை, சமிதுகம பிரதேசத்தைச் சேர்ந்த சுதீர நிர்மால் எனும் 10 வயது சிறுவன் கடந்த 25ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.

பிரதேசவாசிகள் மேற்கொண்ட தேடுதலின்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுவனை அழைத்துச் செல்வது அப்பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களின் காணொளிக் காட்சிகளில் பதிவாகியிருந்தது.

எனினும் சிறுவனுக்கு என்ன நடந்தது என்பதை அறியமுடியாத நிலையில் தொடர் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரணவிலை அருகே காட்டுப் பிரதேசமொன்றில் இருந்து சிறுவனின் சடலம் பிரதேசவாசிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*