;
Athirady Tamil News

விசாரணைகளுக்கு முன்னியாகவில்லை சிவாஜி – சபை அமர்வே காரணம்…!!

0

நில அளவை திணைக்கள வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், வடமாகாண சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாலேயே விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – வட்டுவாகலில், பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியை கோட்டாபய கடற்படை முகாமிற்கு சுவீகரிக்கும் நோக்கில் நில அளவை திணைக்களத்தால் குறித்த பகுதி அளவீடு செய்யப்பட்டது.

எனினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முல்லைதீவு மக்கள் கடற்படை முகாமிற்கு முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து நில அளவீடு நடவடிக்கை கைவிடப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நில அளவை திணைக்கள வாகனத்தை சேதப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நில அளவை திணைக்களத்தால் கடந்த 22ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*