;
Athirady Tamil News

வலப்பனையில் விபத்து; 37 பேர் படுகாயம்; சாரதியின் கவனயீனமே காரணம்..!!

0

வலப்பனை – நில்தண்டாஹின்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை பதிவாகியுள்ளது.

நில்தண்டாஹின்னவிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தெறிபாஹா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களில் 13 பேர் நுவரெலியா வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளனர்.

ஏனையோர் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன பிரதேச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேரூந்து சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெறிபாஹா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − nine =

*