;
Athirady Tamil News

டெல்லி தலைமை செயலாளரை தாக்கிய வழக்கு- ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு ஜாமின் மறுப்பு..!!

0

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் வீட்டில் கடந்த 19-2-2018 அன்றிரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அரசின் சார்பில் விளம்பர செலவுகள் அதிகரித்து வருவது தொடர்பாக அப்போது தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாசுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் ஜர்வால் மற்றும் அமானத்துல்லா கான் ஆகியோர் முதலமைச்சர் முன்னிலையில் தன்னை தாக்கியதாக ஆளுநரிடம் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இருவரையும் கைது செய்தனர்.

டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரும் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தங்களை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என பிரகாஷ் ஜர்வால் மற்றும் அமானத்துல்லா கான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் ஷேபாலி பர்னாலா டான்டான் கடந்த 23-ம் தேதி தள்ளுபடி செய்தார்.

மீண்டும் இதே கோரிக்கையுடனும், எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வால் சமீபத்தில் திருமணம் ஆனவர், இளம் வயதுக்காரர் என்ற வாதத்துடனும் அவரது வக்கீல் இன்று டெல்லி கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த டெல்லி கோர்ட் அவரை ஜாமினில் விடுவிக்க மறுத்து விட்டது.

தலைமை செயலாளரை தாக்கிய எம்.எல்.ஏ. இளம் வயதுக்காரர் என்ற வாதத்துக்கு பதிலளித்த சிறப்பு நீதிபதி அனுஜ் பஜாஜ் சந்த்னா, 63 வயதாகும் தலைமை செயலாளரின் கண்ணியம் வெளிப்படையாக சிதைக்கப்பட்டதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − six =

*