;
Athirady Tamil News

பிரபல கற்பழிப்பு, கொலை குற்றவாளி சைக்கோ சங்கர் பெங்களூரு சிறையில் தற்கொலை..!!

0

தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் 13 பெண்களை கற்பழித்து, கொலை செய்தது, நகைகளை கொள்ளையடித்தது உள்ளிட்ட வழக்குகளில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வந்த ’சைக்கோ சங்கர்’ எனப்படும் ஜெய்சங்கர் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பரில் உயர் பாதுகாப்பு கொண்ட பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தப்பி பரபரப்பை ஏற்படுத்தினான். பின்னர், சில நாட்களுக்கு பிறகு போலீசாரிடம் பிடிபட்டு அதே சிறையில் அடைக்கப்பட்டான்,

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 2.15 மணியளவில் பரப்பன அக்ரஹாரா சிறை காவலர்கள் வழக்கமான சோதனைக்காக சிறை அறைகளில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது, தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெய்சங்கர் மயங்கிய நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவனை பெங்களூருவில் உள்ள விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு சிறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 5.15 மணியளவில் ஜெய்சங்கரின் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், கன்யாப்பட்டனம் கோனசமுத்திரா கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர், கடந்த 2013-ம் ஆண்டில் நடந்ததுபோல் இரு நாட்களுக்கு முன்னரும் ஜெயலில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளான்.

ஆனால், அவன் போலீசாரிடம் சிக்கியதால் மீண்டும் தனிச்சிறையில் அடைக்கப்பட்டான். இதனால் ஏற்பட்ட விரக்தி காரணமாக ஜெய்சங்கர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தனது அறையில் இருந்த ஷேவிங் பிளேடை பயன்படுத்தி ஜெய்சங்கர் கழுத்தை அறுத்து கொண்டதாக தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*