;
Athirady Tamil News

குடும்ப தகராறில் மனைவியை எரித்துக்கொன்ற தொழிலாளி..!!

0

தூத்துக்குடி டி.சவேரியார் புரத்தை சேர்ந்தவர் அய்யாமுத்து (வயது 52). டீ மாஸ்டரான இவரது மனைவி சாந்தி (45). இவர்களது மகள் கணவரை பிரிந்து அப்பகுதியில் வசித்து வருகிறார். மகள் வீட்டிற்கு சாந்தி அடிக்கடி சென்று வந்தாராம்.

இதனால் அய்யாமுத்து தனது மனைவியிடம், மகளை அவரது கணவரோடு சேர்த்து வைக்க வேண்டும். எனவே மகள் வீட்டிற்கு அடிக்கடி செல்ல கூடாது என கூறினாராம். இதனால் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை ஏற்பட்ட வாக்குவாதத்தில் அய்யாமுத்து மனைவியை சரமாரியாக தாக்கி அவரது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்து தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயமடைந்த சாந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சாந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிந்து அய்யாமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்தகராறில் மனைவியை கணவர் உயிரோடு தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + eight =

*