;
Athirady Tamil News

ஈபிள் கோபுரத்தில் பள்ளிவாசல் அமைக்கப்படுகிறதா? காட்டுத்தீ போல் பரவும் தகவல்..!!

0

பிரான்ஸின் ஈபிள் கோபுரத்தின் முதலாவது தளத்தில், இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக, போலியான தகவல் ஒன்று பரவி வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் உலகப் புகழ் பெற்றது, உலக அதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது.இந்த கோபுரத்தின் முதலாவது தளத்தில், இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் அமைக்கப்பட உள்ளதாகவும், ஒரே நேரத்தில் இதில் 45 பேர் வரை தொழுகை செய்ய முடியும் என்றும், மின்னஞ்சல் ஒன்று நாடு முழுவதும் பரவியுள்ளது.

இந்த மின்னஞ்சல், பத்திரிக்கை அலுவலகத்திற்கு வர, ஈபிள் கோபுர அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர் பத்திரிக்கையாளர்கள். ஆனால், இது போலியான தகவல் என அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதுபோன்ற மின்னஞ்சல் வந்தால், அதனை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + nineteen =

*