;
Athirady Tamil News

உதவியாளராக இருந்த பெண்ணை கர்ப்பிணியாக்கிய துணை பிரதமர் எடுத்த திடீர் முடிவு..!!

0

பெண் உதவியாளர் ஒருவரை கர்ப்பிணியாக்கியதாக குற்றம் சாட்டப்படும் அவுஸ்திரேலிய துணை பிரதமர் தனது பதவியை ராஜினிமா செய்வதாக அறித்துள்ளார்.

அவுஸ்திரேலியா நாட்டின் துணைப் பிரதமரும், தேசிய கட்சியின் தலைவருமான பார்னபி ஜாய்ஸ் தன்னிடம் ஊடக ஆலோசகராக பணிபுரிந்த விக்கி கேம்பியன் என்ற 33 வயது பெண்ணுடன் நெருக்கமாக பழகியதன் விளைவாக அந்தப் பெண் கர்ப்பமானார்.

இது குறித்து அவரிடம் தொடர்ந்து எதிர்க்கட்சியினரும், பத்திரிகையாளர்களும் கேள்வி மேல் கேள்வி கேட்க தொடங்கினர்.

அதுமட்டுமின்றி பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் தவறு செய்யக்கூடாது. அதனால் உயர் பதவிகளை வகிப்பவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுடன் எவ்வித உறவும் வைத்துக்கொள்ள கூடாது என்ற புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கையும் விடப்பட்டது.

ஆனால் இந்த கோரிக்கைக்கு பிரதமர் மால்கோம் டர்ன்புல் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பார்னபி ஜாய்ஸ் நேற்று திடீரென்று தனிப்பட்ட காரணங்களால் தனது துணை பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

மேலும், தேசியக் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் அவர் ராஜினமா செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + four =

*