;
Athirady Tamil News

அம்பாறையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல், தொடரும் பதற்றம்! – வெளியான அதிர்ச்சிக் காணொளி…!!

0

அம்பாறையில் உள்ள பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் என்பன மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு இனவெறி செயற்பாடுகளே காரணம் என அதிர்ச்சி தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று (திங்கட்கிழமை) இரவு பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த இளைஞர்கள் பள்ளிவாசல் மற்றும் உணவகங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமையினால் அம்பாறையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், நாட்டில் இனப்பாகுபாடு காணப்படுவதாக பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன.

இந்த நிலையில், அம்பாறையில் உள்ள உணவகம் ஒன்றில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் உணவினைக் கொள்வனவு செய்த போது, அந்த உணவில் இனவிருத்தியை கட்டுப்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் கலந்து கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தினை அறிந்து கொண்டதன் பின்னர், உணவகத்தில் பணிபுரியும் நபர் ஒருவரிடம் பெரும்பான்மை இளைஞர்கள் சிலர் விசாரித்தபோது அவர் குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பெரும்பான்மை இளைஞர்கள் குறித்த உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய காரணத்தினால் பதற்ற நிலை நீடித்து, பள்ளிவாசல் மற்றும் ஏனைய முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த உணவகத்தின் பணியாளர் ஒருவர் “உணவில் இனவிருத்தியைக்கட்டுப்படுத்தும் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுத்தேன்” என ஒப்புகொள்ளும் வகையில் அமைந்த காணொளி ஒன்றும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

மேலும் குறித்த உணவகத்தில் தொடர்ந்து மூன்று வருடங்களாக இவ்வாறு முஸ்லிம் இனம் தவிர்ந்தவர்களுக்கு இனவிருத்தியை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் உணவில் கலந்து கொடுக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் அம்பாறையில் பதற்ற சூழல் அதிகரித்துள்ளதோடு, பலத்த பொலிஸ் பாதுகாப்புகள் போடப்பட்டு பதற்ற சூழலை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − eight =

*