;
Athirady Tamil News

மும்பையில் தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை..!!

0

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள மெரினா பிளாசா எதிரே கார் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தொழிலதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஜிகார் தக்கர் (41 வயது). இவர் நேற்று இரவு தனது காரில் டிரைவருடன் மெரினா பிளாசாவுக்கு வந்துள்ளார். பின்னர் கார் டிரைவரை கீழே இறங்க சொல்லிய ஜிகார் தாகூர் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் அதிர்ச்சியடைந்த கார் டிரைவர் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 5 =

*