;
Athirady Tamil News

ஹெலிகாப்டரில் திடீர் தீ: தெலுங்கானா முதல்-மந்திரி உயிர் தப்பினார்..!!

0

தெலுங்கானா மாநிலம் கரிம் நகரில் நேற்று நடந்த விவசாயிகள் கூட்டத்தில் முதல்-மந்திரி சந்திரசேகர்ராவ் கலந்து கொண்டார். பின்னர், அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பெடப்பள்ளி என்ற இடத்திற்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். இதற்காக ஹெலிகாப்டர் புறப்பட தயாராக இருந்தது. அப்போது ஹெலிகாப்டரில் இருந்த ஒரு பையில் இருந்து புகை கிளம்பியது. சிறிதுநேரத்தில் அந்த பை தீப்பிடித்தது. உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பையை வீசி எறிந்தனர். பின்னர் அதில் பிடித்த தீயை அணைத்தனர். பையை சோதனை செய்தபோது, அதில் வயர்லெஸ் கருவிகளுக்கு பயன்படுத்தும் பேட்டரிகள் இருந்தன. அதிக வெப்பம் காரணமாக அவை எரிந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

இதன் பின்னர் ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. ஹெலிகாப்டர் புறப்படும் முன்பே தீப்பிடித்த பை கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. முதல்-மந்திரி சந்திரசேகர்ராவ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*