;
Athirady Tamil News

சீனர்­களின் கடைகள் கொழும்பில் அதி­க­ரித்து வரு­வது எவ்­வாறு.?..!!

0

கொழும்பு நகரில் சீனர்­க­ளது வியா­பா­ரஸ்­த­லங்கள், கடைகள் அதி­க­ரித்து வரு­வது எவ்­வாறு என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அமைச்­ச­ர­வையில் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்­றது.

இங்கு உள்ளூர் சில்­லறை வியா­பா­ரி­களின் பிரச்­சினை குறித்து கவ­னத்­திற்கு கொண்­டு­வந்த ஜனா­தி­பதி கொழும்பு நகரில் சீனர்­க­ளது வியா­பார நிலை­யங்கள், கடைகள் அதி­க­ரித்து வரு­கின்­றன. சீனா­வி­லி­ருந்து பொருட்­களை நேர­டி­யாக கொண்டு வந்து இவர்கள் விற்­பனை செய்து வரு­கின்­றனர்.

இதனால் தாம் பாதிக்­கப்­ப­டு­வ­தாக உள்ளூர் சில்­லறை வியா­பா­ரிகள் முறை­யி­டு­கின்­றனர் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இவ்­வாறு சீனர்­களின் கடைகள் கொழும்பு நகரில் அதி­க­ரிப்­பது எப்­படி? என்று கேள்வி எழுப்­பிய ஜனா­தி­பதி உள்ளூர் சில்­லறை வியா­பா­ரிகள் தமக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்து சுக­த­தாஸ உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் அடுத்­த­வாரம் மாநா­டொன்­றினை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர்.

இதைக் கேள்­வி­யுற்ற நான் அத்­த­கைய மாநாட்டை நடத்­தாமல் என்­னுடன் பேச வரு­மாறு அழைத்­துள்ளேன். இவ்­வாறு உள்ளூர் சில்­லறை வியா­பா­ரிகள் பாதிக்­கப்­ப­டு­வதை அனு­ம­திக்க முடி­யாது என்றும் ஜனா­தி­பதி எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.

வெளி­நாட்­ட­வர்கள் ஒரு மில்­லியன் டொலர்­களை முத­லீடு செய்தால் வர்த்­தக நிலை­யங்­களை அமைக்க முடியும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த தொகை ஐந்து மில்லியன் டொலர்களாக மாற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் இதன்போது விளக்கமளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − four =

*