;
Athirady Tamil News

எதிர்க்­கட்சித் தலை­வரை பெற்றே தீருவோம் : கூட்டு எதி­ரணி அறி­விப்பு..!!

0

எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக நாங்கள் தொடர்ந்து செயற்­ப­டுவோம். எமக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியைத் தராமல் சபா­நா­யகர் ஜன­நா­யக விரோ­த­மாக செயற்­பட்­டுக்­கொண்டு வரு­கின்றார் என்று கூட்டு எதிர்க்­கட்சித் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.

அர­சாங்கம் மக்­களின் ஆணையை இழந்­துள்­ளது. எனவே உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத்­தேர்­தலை நடத்தி புதிய ஆட்­சியை கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கூட்டு எதிர்க்­கட்­சியின் அடுத்த கட்ட நட­வ­டிக்கை எவ்­வாறு அமையும் என்று விப­ரிக்­கை­யி­லேயே தினேஷ் குண­வர்த்­தன மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் இது­தொ­டர்பில் மேலும் விப­ரிக்­கையில்,

நாங்கள் அடுத்தகட்­ட­மாக அர­சியல் ரீதியில் எவ்­வாறு செயற்­ப­டு­வது என்­பது குறித்து ஆராய்ந்து வரு­கின்றோம். குறிப்­பாக தேவை­யான நேரத்தில் அவ­சி­ய­மான திட்­டங்­களை நாங்கள் முன்­னெ­டுப்போம். அதில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம். மக்­களின் ஆணை மஹிந்த தரப்­பிற்கே கிடைத்­தி­ருக்­கின்­றது. எனவே தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் தொடர்ந்து பய­ணிக்க முடி­யாது.

அர­சாங்கம் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத் தேர்­தலை நடத்தி புதிய ஆட்­சியை நிறுவ நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். இந்த அர­சாங்­கத்­திற்கு தொடர்ந்து பய­ணிக்க முடி­யாது. அந்த பய­ணத்தை மக்கள் நிறுத்­தி­யி­ருக்­கின்­றனர். அதனைப் புரிந்­து­கொண்டு அர­சாங்கம் பொதுத்­தேர்­தலை நடத்­த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

இதே­வேளை பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை கூட்டு எதி­ர­ணிக்கு வழங்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். சபா­நா­யகர் இந்த விட­யத்தில் ஜன­நா­யக ரீதியில் செயற்­ப­ட­வேண்டும். பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களின்படி எண்­க­ணிதம் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வேண்டும். எண்­க­ணிதம் என்­பது இந்த முழு உல­கத்­தி­னாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒரு விட­ய­மாகும்.

எனவே எண்­க­ணித ரீதி­யாக பார்க்கும் போது பாரா­ளு­மன்­றத்தில் கூட்டு எதி­ர­ணிக்கே அதி­க­ளவு எம்.பி.க்கள் இருக்­கின்­றனர். எனவே எதிர்க்­கட்சித் தலைவர் பதவி கூட்டு எதி­ர­ணிக்ேக வழங்­கப்­ப­ட­வேண்டும்.

தற்­போது எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை வகிக்­கின்ற தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பை­விட மூன்று மடங்­கிற்கும் அதி­க­மான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை கூட்டு எதி­ரணி வைத்­தி­ருக்­கின்­றது. எனவே இந்த விட­யத்தை கவ­னத்தில் கொண்டு சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிரணிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எவ்வாறிருப்பினும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக கூட்டு எதிரணி தொடர்ந்து செயற்படும் என்பதை உறுதியாக தெரிவிக்கின்றோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + twenty =

*