;
Athirady Tamil News

அர்ஜுன மகேந்­தி­ர­னுக்கு அனுப்­பிய நீதி­மன்ற அறி­வித்தல் திரும்பிய வந்­தது..!!

0

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் முன்­னி­லையில் எதிர்­வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி அல்­லது அதற்கு முன்­ன­தாக ஆஜ­ரா­கு­மாறு மத்­திய வங்கி பிணைமுறி மோசடி விவ­கா­ரத்தின் பிர­தான சந்­தேக நப­ரான அர்ஜுன மகேந்­தி­ரனின் சிங்கப்பூரில் அவர் வசித்து வந்த முக­வ­ரிக்கு கோட்டை நீதிவான் அதி­வேக அஞ்சல் சேவை ஊடா­கவும் டி.எச்.எல். கூரியர் சேவை ஊடா­கவும் அனுப்­பிய உத்­த­ரவு மீள திரும்பி வந்­துள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

அர்ஜுன மகேந்திரன் வசிப்­ப­தாக உறுதி செய்­யப்­பட்ட அவ­ரது 20, கஸ்­காடன் வீதி, 18/1, டெம்சன், சிங்­கப்பூர், 2497726 என்னும் முக­வரியிலுள்ள வீட்டில் அவர் தற்­போது இல்லை என்­பதும் அவர் அங்­கி­ருந்து முக­வ­ரியை மாற்றி தலை­ம­றை­வா­கி­யுள்­ள­மையும் குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இந் நிலையில் அர்ஜுன மகேந்­திரன் மார்ச் மாதம் 8 ஆம் திக­திக்குள் இலங்­கைக்கு வந்து குற்றப் புல­னா­ய்வுப் பிரிவில் ஆஜ­ரா­வது சாத்­தி­ய­மில்லை என்­பதால், அவர் தொடர்பில் முன்­னெ­டுக்­கத்­தக்க அடுத்த கட்ட நட­வ­டிக்கை தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரிவும் சட்ட மா அதிபர் திணைக்­கள அதி­கா­ரி­களும் ஆராய்ந்து வரு­கின்­றனர். பெரும்­பாலும் அவரைக் கைது செய்ய சர்­வ­தேச பொலி­ஸா­ருக்கு சிவப்பு அறி­வித்­தலை நீதி­மன்றம் ஊடாக விடுப்­பது தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்பட்­டுள்­ளது.

ஏற்­க­னவே கடந்த பெப்­ர­வரி மாதம் 15 ஆம் திக­திக்கு முன் நீதிமன்றில் ஆஜ­ராக நீதி­மன்றம் அர்ஜுன மகேந்தி­ர­னுக்கு அறி­வித்­தலை இன்­டர்போல் பொலிஸார் ஊடாக அனுப்­பி­யி­ருந்த போதும் அது தொடர்பில் உள்ள நடைமுறை சிக்கல் கார­ண­மாக அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை.

எவ்­வா­றா­யினும் அர்ஜுன மகேந்தி­ரனின் தொலை­பேசி இலக்கம் என நம்­பப்­படும் இலக்­கத்தை விசா­ர­ணைகள் ஊடாக குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வினர் பெற்­றி­ருந்த நிலையில், குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவின் உதவிப் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் பி.அம்­பா­வில நேற்றுக் காலை வரை அவ்­வி­லக்­கத்­துக்கு அழைக்க முயற்­சித்த போதும், அவ்­வி­லக்கம் பாவ­னையில் இருக்­க­வில்லை. எவ்­வா­றா­யினும் கடந்த 15 ஆம் திக­திக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜ­ராக வேண்டும் என்­பதை அர்ஜுன மகேந்திரன் அறிந்­தி­ருந்தார் என்­பதை சி.ஐ.டி. உறுதி செய்­தி­ருந்­தது.

இன்­டர்போல் பொலி­ஸாரின் சட்ட விதி­களில் 10.1 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக நீதி­மன்ற அறி­வித்­தலை கைய­ளிக்க முடி­யாது என அறி­வித்­தி­ருந்த நிலையில், இலங்­கை­யுடன் உள்ள தொடர்பு கார­ண­மாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து அர்ஜுன மகேந்திரன் குறித்த சிங்­கப்பூர் முக­வ­ரியில் வசிப்­பதை உறுதி செய்­தனர். அதன்படியே அந்த முகவரிக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டிருந்தது.

பெரும்பாலும் அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய சிவப்பு அறிவித்தலை பெற குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை களை முன்னெடுத்துள்ளதாக அறிய முடி கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + three =

*