அம்பாறை மாவட்டத்தில் விமானங்கள் வானில் பறப்பது தொடர்பான வதந்தி ..!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் விமானங்கள் வானில் பறப்பது தொடர்பானது அம்பாறை மாவட்டத்தில் நேற்று இன்று விமானங்கள் வழமைக்கு மாறாக வானில் வட்டமிடுவதாக தெரிவித்து சில முகநூலில் தேவையற்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன.
இவ்விடயம் தொடர்பாக விமானப்படை பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவலின் படி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் கிழமை விமானப்படையினரின் கண்காட்சியுடன் கூடிய நிகழ்வு ஒன்று நடைபெற உள்ளதனால் அதற்கான பயிற்சிகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே சந்தர்ப்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”