;
Athirady Tamil News

டி ராஜேந்தர் கட்சியின் பலகையில் ஜெயலலிதா படம் சேர்ப்பு..!! (படங்கள்)

0

டி. ராஜேந்தர் கட்சியின் பலகையில் ஜெயலலிதா படம்- வீடியோ சென்னை:

நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தர் கட்சிப் பலகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படம் சேர்க்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடிகர்கள் பலரும் அரசியல் குறித்தும் அரசு குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். நடிகர் விஷார் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட் வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

டி ராஜேந்தர் முக்கிய அறிவிப்பு

இந்நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக லட்சிய திமுவின் தலைவரும், நடிகர் மற்றும் இயக்குநரான டி ராஜேந்தர் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

கட்சிப் பலகை திறப்பு

அப்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அவர் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து தனது கட்சிப் பலகையை அவர் திறந்து வைத்தார்.

கட்சிப் பலகையில் ஜெ.படம்

அதில் ஜெயலலிதாவின் படத்தை டி ராஜேந்தர் சேர்த்துள்ளார். பெரியார், அண்ணா, எம்ஜிஆர் படங்களை தொடர்ந்து ஜெயலலிதாவின் படமும் சேர்க்கப்பட்டுள்ளது.

ரஜினி, கமலை விளாசிய டிஆர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி ராஜேந்தர் ஜெயலலிதா மறைவு, கருணாநிதி உடல் நலக்குறைவால் பாதிப்பு உள்ளிட்டவற்றை நினைவு கூர்ந்தார். இந்த நேரத்தில் சிலர் கருணாநிதியிடம் ஆசி பெற்று கட்சி தொடங்குகின்றனர் என்று நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசனையும் சாடினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*