;
Athirady Tamil News

ஹல்துமுல்லை:மலை உச்சியில் மாட்டிக் கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீட்பு..!!

0

ஹல்துமுல்லை மலை உச்சியில் வழிதவறி மாட்டிக் கொண்ட பல்கலைக்கழக மாணவர்களை பத்திரமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தனியார் பல்கலைக்கழகமொன்றின் மாணவர்கள் ஒன்பது பேர் மலையுச்சி சுற்றுலா அனுபவத்திற்காக ஹல்துமுல்லை பிரதேசத்தில் உள்ள வங்கெடி கந்தை (உரல் மலை) பிரதேசத்திற்குச் சென்றுள்ளனர்.

நேற்று மாலை அவர்கள் மலையுச்சியில் கூடாரமடித்து தங்கியிருந்த நிலையில் திடீர் காற்று மற்றும் மழைக்குள் சிக்கி பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன் காற்றின் காரணமாக அவர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் கூரை பிடுங்கி வீசி எறியப்பட்டுள்ளது.எனினும் குறித்த மாணவர்கள் மீண்டும் மலையடிவாரத்தை அடைய முடியாத நிலையில் வழிதவறி மலை உச்சியில் தவிக்க நேர்ந்துள்ளது.

இந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து விசேட பொலிஸ் குழுவொன்றினால் பிரதேசவாசிகளின் உதவியுடன் மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் கடும் காற்று மற்றும் மழையில் பாதிக்கப்பட்டதன் காரணமாக மாணவரொருவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + fifteen =

*