;
Athirady Tamil News

மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய சேவையாளனாக இருப்பேன் -நா.சேனாதிராஜா..!!

0

மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய சேவையாளனாக இருப்பேன் – மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா

மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய சேவையாளனாக இருப்பேன் என மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா தெரிவித்தார்.

வவுனியா நகரசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரான நா.சேனாதிராஜா தெரிவித்தார்.

வவுனியா நகரசபை தேர்தலில் வெற்றி தொடர்பாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதில் மேலும் தெரிவித்ததாவது,

யுத்தத்தில் பாதிக்கப்பட்டு மீள் கட்டுமானத்திற்கு அத்தியாவிசியமான நகரமாக காணப்படுகின்ற வவுனியாவில் அதன் மையப்பகுதியான நகரசபைக்காக போட்டியிட்ட என்னை வெற்றி பெற வைத்த வைரவபுளியங்குளம் வட்டார வாக்காளர்களிற்கும் ஏனைய ஆதரவு தெரிவித்த ஆதரவாளர்களுக்கும் எனத நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

வவுனியபா நகர் பல அபிவிருத்திகளை காண வேண்டிய நிலையில் உள்ளது. அத்துடன் எனது வட்டாரமான வைரவபுளியங்குளம் வட்டாரத்திலும் பல்வேறு தேவைகளை நிறைவுகான் தன்மைக்கு கொண்டு வர வேண்டும் என்ற அவாவில் மக்கள் உள்ளனர்.

எனவே இதனை கருத்தில் கொண்டு எப்போதும் மக்களிற்காக என்னை அர்ப்பணித்து பணியாற்ற திட சங்கற்பம் பூண்டுள்ளேன்.

இந்நிலையில் எமது வட்டாரதட்தில் என்னை தங்கள் சேவையாளனாக கருதி வாக்களித்தவர்களளுக்கும், வவுனியா மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும். எனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 3 =

*