;
Athirady Tamil News

வெளிநாட்டில் வியாபாரங்கள் இருப்பதால் இந்தியா வர முடியாது – சி.பி.ஐ.க்கு நிரவ் மோடி அல்வா..!!

0

பஞ்சாப் நேஷனல் உள்ளிட்ட வங்கிகளில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, அமெரிக்காவிற்கு தப்பிச் சென்ற நிரவ் மோடியை விசாரணைக்கு ஆஜராவதற்காக இந்தியாவுக்கு வருமாறு சி.பி.ஐ. அதிகாரிகள் இமெயில் அனுப்பினர்.

அதற்கு பதிலளித்துள்ள நிரவ் மோடி எனக்கு வெளிநாட்டில் வியாபாரங்கள் இருப்பதால் சி.பி.ஐ. விசாரணையில் ஆஜராக முடியாது என பதில் அனுப்பியுள்ளார். இதற்கு பதில் அனுப்பிய சி.பி.ஐ., இதுதொடர்பாக நீங்கள் (அவர் எந்த நாட்டில் இருக்கிறார்? என்பது தெரியாத நிலையில்) தங்கியுள்ள நாட்டில் இருக்கும் இந்திய தூதரகத்தை அணுகுமாறு அவருக்கு அறிவுறுத்தி உள்ளது.

உங்களுக்கு தேவையான பயண ஏற்பாடுகளை நாங்கள் செய்து தருகிறோம். நீங்கள் அடுத்த வாரத்துக்குள் கட்டாயமாக இந்தியாவுக்கு வந்து எங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 18 =

*