;
Athirady Tamil News

ஊழலை புற்றுநோயுடன் ஒப்பிடுவதா? பிரபல சமூகச் சேவகி ஆதங்கம்..!!

0

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இந்த முறைகேடு தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரை சி.பி.ஐ கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், அந்த வங்கியின் முன்னாள் இயக்குநர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியின் தற்போதைய தலைவர் சுனில் மேஹ்தா இந்த ஊழலை புற்றுநோய் என ஒப்பிட்டு பேசியிருந்தார். இந்நிலையில், சுனில் மேஹ்தாவின் ஊழல் – புற்றுநோய் ஒப்பீடுக்கு, சென்னை அடையார் புற்றுநோய் மருத்துமனை மருத்துவரும், பத்மபூஷன் மற்றும் மகசசே விருதுகளை வென்றவருமான டாக்டர் சாந்தா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுனில் மேஹ்தாவுக்கு டாக்டர் சாந்தா எழுதியத்தில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

உங்களுடைய வங்கியில் சமீபத்தில் ஏற்பட்ட ஊழல் நிகழ்வை புற்றுநோயுடன் ஒப்பிட்டு நீங்கள் (சுனில் மேஹ்தா) பேசியது என்னை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. ஊழல் என்பது குற்றம் ஆனால் புற்றுநோய் குற்றம் அல்ல.

ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் எங்களது மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களில் அதிகாமானவர்களின் உயிரை நாங்கள் காப்பாற்றியுள்ளோம் என்பது எங்களுக்கு பெருமையே. ஒரு தவறை புற்றுநோயுடன் தொடர்பு படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை.

எனவே, ஊழலையும் புற்றுநோயையும் தொடர்பு படுத்தாதீர். இது தொடர்பாக நீங்கள் வெளியிட்ட கருத்துக்களை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், இது போல வேறு யாரும் புற்றுநோயை தொடர்பு படுத்தி பேச வேண்டாம் எனவும் கூறிக்கொள்கிறேன்.

என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*