;
Athirady Tamil News

குளிர் தாங்காமல் கதறிய குழந்தை: தெருவில் விட்டு விட்டு ஓடிய இரக்கமற்ற நபர்..!!

0

பச்சிளங்குழந்தையை ஒருவர் கடும் குளிர் என்று கூட பாராமல் தெருவில் விட்டுவிட்டு ஓடியுள்ள சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் லூனார் புத்தாண்டு விடுமுறையை, குடும்பத்தினர், உறவினர் ஒன்று கூடி கொண்டாடுவர். அந்த தருணத்தில் கடந்த புதன் கிழமை உள்ளுர் நேரப்படி நள்ளிரவு 1.30 மணி அளவில் ரஷ்ய எல்லையை ஒட்டிய ஜியாமுஷி என்ற இடத்தில் மர்ம நபர் ஒருவர் மைனஸ் 20 டிகிரி இருக்கக் கூடிய அந்த குளிரில் மருத்துவமனை ஒன்றின் முன் உள்ள தெருவில் குழந்தையை விட்டு விட்டு சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்து ஓடிச் சென்றான்

சுமார் அரைமணி நேரமாக குளிர் தாங்காமல் அந்த குழந்தை தொடர்ந்து கத்தியுள்ளது. இந்த சத்தத்தைக் கேட்டு மருத்துவமனையில் இருந்த செவிலியர் ஒருவர் அதன் ஆரோக்கியத்தைப் பரிசோதித்து முதலுதவி அளித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துள்ளார்.

இது தொடர்பான காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதால், குழந்தையை கடும் குளிரில் விட்டுச் சென்றவர் யார் என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − five =

*