;
Athirady Tamil News

10 ஆண்டுகளாக இரண்டு மகள்களை பலாத்காரம் செய்த தந்தை: சிக்கியது எப்படி?..!!

0

அமெரிக்காவில் பத்து ஆண்டுகளாக இரட்டை சகோதரிகளை சங்கிலியால் கட்டி வைத்து பலாத்காரம் செய்து வந்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Minneapolis கவுண்டியை சேர்ந்தவர் ஜெர்ரி லீ குரி (51). இவர் தனது இரண்டு மகள்களையும் கடந்த பத்தாண்டுகளாக வீட்டின் படுக்கைறையில் சங்கிலியால் கட்டி வைத்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

தற்போது இரண்டு பேரும் 20-களில் உள்ள நிலையில் சமீபத்தில் இரண்டு சகோதரிகளில் ஒருவர் எப்படியோ சங்கிலியை கழட்டி கொண்டு வீட்டை விட்டு தப்பித்து சென்று பொலிசில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து குறித்த வீட்டுக்கு சென்ற பொலிசார் ஜெர்ரியை கைது செய்துள்ளனர்.

இதையடுத்தே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் ஜெர்ரியின் மனைவிக்கும் சம்மந்தமிருக்கும் நிலையில் அவர் குறித்த தகவல் தெரியவில்லை.இதோடு இரண்டு சகோதரிகளையும் ஜெர்ரி அடித்து துன்புறுத்தியுள்ளதால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் வெகுகாலம் சங்கிலியால் கட்டி வைக்கபட்டிருந்தால் அவர்களால் எழுந்த நடக்க முடியவில்லை.

இருவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், கைது செய்யப்பட்ட ஜெர்ரியிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − six =

*