;
Athirady Tamil News

பிரான்சில் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்கூட்டர் அறிமுகம்..!!

0

பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த Archos நிறுவனம் முதன் முறையாக அன்ரோயிட் இயங்குதளத்தின் உதவியுடன் கட்டுப்படுத்தக்கூடிய ஸ்கூட்டரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது.

Citee Connect எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரில் பிரதான நினைவகமாக 1GB RAM, 8GB சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளன.

அன்ரோயிட் ஓரிய பதிப்பில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன் 3G இணைய வலையமைப்பில் செயற்படக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

இதனால் கூகுள் மேப்பினைப் பயன்படுத்தி இலகுவாக பயணிக்கக்கூடிய வசதி கிடைக்கின்றது.

மேலும் 8.5 அங்குல விட்டம் கொண்ட சில்லுகள், 250W மின்மோட்டர், 36W மின்கலம் ஆகியனவற்றையும் உள்ளடக்கியுள்ளது.26 பவுண்ட் எடை கொண்ட இந்த ஸ்கூட்டர் 220 பவுண்ட் எடைகொண்ட பொருட்களை ஏற்றிச் செல்லக்கூடியது.இதன் விலையானது 617 அமெரிக்க டொலர்கள் ஆகும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 5 =

*