;
Athirady Tamil News

சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தும் பஞ்சினால் ஆறு வருடங்கள் அவஸ்தைப்பட்ட பெண்..!!

0

வயிற்றில் ஏற்படும் அனேகமான கோளாறுகளுக்கு உணவுப் பிரச்சினையே காரணமாக விளங்கும்.

ஆனால் சத்திரசிகிச்சையின்போது வைத்து தைக்கப்பட்ட பஞ்சுகளினால் பெண் ஒருவர் ஆறு வருடங்களாக வயிற்றுக்கோளாறினால் அவஸ்தைப்பட்டுள்ளார்.

ஜப்பானை சேர்ந்த 42 வயதான குறித்த பெண் வயிற்றில் கோளாறு ஏற்படும்போதெல்லாம் உணவுக் குறைபாடு என எண்ணியுள்ளார்.

எனினும் நீண்ட காலமாக இப் பிரச்சினை தொடரவே வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இதன்போது அவரை பரிசோதித்த வைத்தியர் குழு CT ஸ்கான் செய்யுமாறு பணித்தது.ஸ்கானிங் முடிவில் பெண்ணின் வயிற்றில் இடுப்புப் பகுதியை அண்மித்ததாக குறித்த பஞ்சுகள் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் இரு முறை சிசேரியனுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இதன்போதே இப் பஞ்சுகள் தவறுதலாக வயிற்றுப் பகுதியில் கைவிடப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 18 =

*